Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கவி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முன்னாள் பங்குதாரர் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்

0

 

 

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த கவி மருத்துவமனை பங்குதாரில் ஒருவர் டாக்டர் .ராஜ் பாஸ்கர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

நான் சங்கிலியாண்டபுரம் பகுதியில் டாக்டர் ரமேஷ், வைரவன், அருண், சுதா, மற்றும் பாபு ஆகியோருடன் சேர்ந்து கவி மருத்துவமனையினை நடத்தி வருகிறேன்.

அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக உள்ளேன். மேலும் மருத்துவமனையில் நலனுக்காக பல்வேறு இடங்களில் எனது பெயரில் கடன் வாங்கி நிர்வாகத்தை நடத்தி வந்தேன்.

கடந்த கொரானா அதிகம் பாதிப்பு இருந்த காலகட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை ஏற்று எங்கள் மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி அரும்பாடுபட்டு மக்களுக்கு சேவை செய்து பல உயிர்களை கொரோனா நோயிலிருந்து காப்பாற்றி உள்ளோம்.

குறைவான காலத்தில் அதிக மக்களுக்கு மருத்துவ வசதி செய்து சேவை செய்து வந்தேன்.

மகாதேவன் என்பவரின் மகன் ரமேஷ் என்பவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

மேலும் அவர் எங்கள் மருத்துவமனையுடன் பங்குதாரராக சில மாதங்களாக சேர்ந்திருந்தார். அவர் அவரது பங்காக பணம் எதுவும் போடாமல் ரூபாய் ஒர் கோடி மதிப்புள்ள புதிய மருத்துவ உபகரணங்கள் என்று கூறி பழைய மற்றும் சேதமடைந்த உபகரணங்களை மருத்துவமனைக்கு அவருடைய பங்கிற்காக கொடுத்தார்.

மேலும் அவர் பங்கிற்கு கொடுத்த உபகரணங்கள் அனைத்துமே சேதமடைந்து விட்டது. அதனை பயன்படுத்த முடியாமலும் மற்றவைகள் அனைத்தும் அடிக்கடி பழுது அடைந்து வந்தது.

இது குறித்து கேட்கும்போதெல்லாம் சரி செய்து கொடுப்பதாக காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் பல உபகரணங்களை சரி செய்து கொடுக்கவில்லை மேலும் அந்த காலகட்டத்தில் மருத்துவமனையில் போதிய லாபம் கிடைக்கவில்லை என்பதால் அவரின் குடும்ப தேவைக்காக தொழில் தேவைக்காகவும் பணம் தேவை என்பதாலும் மருத்துவமனையின் பங்குதாரர்களில் இருந்து அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டு விருப்பப்படி வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து இதுபோன்ற கஷ்டமான சூழ்நிலையிலும் நான் மருத்துவமனையை வெற்றிப்பாதையில் தற்போது நடத்திக் கொண்டிருக்கிறேன்.’

இதை கண்டு கொள்ள முடியாது அவர் என்னை மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் மருத்துவமனையை நடத்த முடியாது என்று மிரட்டியும் வருகிறார்.

பழுதடைந்த உபகரணங்களை சரி செய்து கொடுப்பதாக கூறி அடிக்கடி மருத்துவமனை வந்து பணியாளர்களையும் என்னையும் மருத்துவமனை நடத்துவதற்கு இடையூறு செய்து வந்தார்.

மருத்துவமனை சேவை செய்ய முடியும் என்பதால் ரமேஷ் செய்து வந்த சட்ட விரோத செயல்களை
வேறு வழியில்லாமல் பொருத்து வந்தேன்.
இந்நிலையில் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் ரமேஷ் மற்றும் தெளபிக் ஆகியோர் சட்டவிரோதமாக எனது அனுமதி இல்லாமல் மருத்துவமனையில் புகுந்து சிசிடிவி கேமராவை வேலை செய்யாமல் தடுத்துவிட்டு சிகிச்சையில் இருந்த நோயாளிகளை வெளியில் விரட்டிவிட்டு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு, ஆபரேஷன் தியேட்டர், வார்டு, மருத்துவர்கள், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் அறை ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பூட்டி அனைத்து ரூம் சாவியை எங்கள் மருத்துவமனையில் இருந்து திருடி சென்று உள்ளார்.தடுக்க முயன்ற பணியாளர்களையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற என்னை ரமேஷ் நான் கேட்கும்போதெல்லாம் பணம் தர வேண்டும் இல்லையென்றால் உன்னையும் உனது ப பங்குதாரர்களையும் கொண்டுவிட்டு மருத்துவமனையை எரித்து விடுவேன் எனக் கூறி சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை.

ஆகவே இதற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எனக்கும், எனது பங்குதாரர்களுக்கும் மருத்துவமனைக்கும் பாதுகாப்பு தந்து ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
திருச்சி கவி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முன்னாள் பங்குதாரர் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்

Leave A Reply

Your email address will not be published.