தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும்,தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுகோரிக்கை.
காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுகோரிக்கை.
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தினேஷ், ஏழுமலை, தங்க முத்து, மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உச்சநீதிமன்றம் மாதாமாதம் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் குறுவை, சம்பா நெல் சாகுபடி செய்ய முடியாததால் விவசாயிகள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் உள்ளார்கள். எனவே, கர்நாடக அரசு மீதும் உச்சநீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத மத்திய அரசு மீதும் ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு நஷ்ட ஈடு பெற்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட விடக்கூடாது என்பதுடன் காவிரி கொள்ளிடத்தில் 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்றும், கோதாவரி – காவிரியை இணைக்க வேண்டும் என்றும் இணைக்க மத்திய அரசு உதவிட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை தனி நாடாக மாநில சர்க்கார் அறிவிக்க வேண்டும்.இதற்காக நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
60 வயது அடைந்த அனைவருக்கும் மாதமாதம் ரூ. 500 பென்ஷன் கொடுப்பதை ரூ.5000/- ஆக மத்திய அரசு கொடுக்க வேண்டும்
காவிரி – குண்டாறு, காவிரி – அய்யாறு, மேற்கு தொடர்ச்சி மலை – பொன்னனியாறு, சுரண்டை, ஊத்துமலை பெரியகுளத்திற்கு செல்ல இரட்டைக் குளம் கால்வாய், மேட்டூரிலிருந்து பஞ்சப்பட்டி ஏரிக்கு கால்வாய் வெட்ட வேண்டும்
நேரடி கொள்முதல் நிலையத்தில்நெல் பிடிக்க மாநில சர்க்கார் மூட்டைக்கு ரூ.10/- கொடுப்பதற்கு பதிலாக ரூ. 20/-யை 7 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கொடுத்தால் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ. 50லஞ்சம் கேட்பதை தடுக்க முடியும்.
அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோரும் தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
தென் மாவட்டங்களில் வனவிலங்குகளிடமிருந்து உயிரையும், பயிரையும் காப்பாற்ற வேலி அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட

