Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியின் முக்கிய சாலைகளுக்கு இன்னும் ஆங்கிலேயர்களின் பெயர்கள் எதற்கு ? பெரும்பிடுகு முத்தரையர்,தமிழுக்காக போராடியவர்களின் பெயர்களை சூட்ட வழக்கறிஞர் கிஷோர்குமார் கோரிக்கை,

0

'- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

Ad banner

பறவைகள் சாலையை தினமலர் டி.வி.ராகவன் ராமசுப்பையர் சாலையென்றும்-வில்லியம்ஸ் சாலையை பெரும்பிடுகு முத்தரையர் சாலையென்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

 

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களின் இருப்பை எதிர்கால சந்ததியினர் அறியும் வண்ணம் பல்வேறு பகுதிகளுக்கும், சாலைகளுக்கும் ஆங்கிலேய பிரதிநிதிகளின் பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர். அதனை சுதந்திரம் அடைந்த வைரவிழா அடைந்த பிறகும் இன்றும் நாம் அப்படியே பின்பற்றி வருகிறோம் என்பது உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. இதற்கு திருச்சி கண்டோன்மென்ட் பகுதியியிலுள்ள வில்லியம்ஸ் சாலை, மெக்டெனால்ஸ் சாலை, வார்னர்ஸ் சாலை, பென்வெல்ஸ் சாலைகளே ஒரு உதாரணமாகும்.

 

 

வில்லியம்ஸ், வார்னர்ஸ், மெக்டொனால்ஸ் யார் என்று இன்றைய இளைய தலைமுறைக்கு தெரிந்துக் கொள்ள எந்தவித தேவையும் அவசியமும் இல்லை. மாறாக தமிழுக்கும், தமிழர்களுக்கும், பெண் கல்விக்கும் உதவி பெருமை சேர்த்த அப்பகுதியை சார்ந்த பெருமையாளர்களை மேற்படி சாலைகளுக்கு பெயரிட்டு எதிர்கால தலைமுறை இவர்களின் தொண்டுகளை அறியும் வண்ணம் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது காலத்தின் தேவை.

 

எனவே தமிழர்களின் பெருமையை பேசி, எழுதி வைரவிழா காணும் தினமலர் நாளிதழின் ஸ்தாபகர் டி.வி.ராமசுப்பையரின் மகனும் திருச்சி மற்றும் வேலூர் பதிப்பை திறம்பட நிர்வகித்தவரும் திருச்சி மண்ணின் மைந்தர் பெருமதிப்புமிகு ஐயா டி.வி.ராகவன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர் வாழ்ந்த மற்றும் பணி செய்த பறவைகள் சாலை பகுதியை பெயர் மாற்றம் செய்து டி.வி.ராகவன் ராமசுப்பையர் சாலை என பெயர் மாற்றம் செய்வதோடு, தமிழகத்தின் மூன்று தரைகளையும் ஆண்ட மாவீரன் முப்பாட்டன் ஐயா பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் வீரத்தை போற்றும் விதமாக ஐயாவின் திருவுருவ சிலை அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள வில்லியம்ஸ் சாலையை பெரும்பிடுகு முத்தரையர் சாலை என்று பெயர் மாற்றம் செய்வதோடு, பல ஆண்டு காலமாக இன்றும் சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் தங்கி படிக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு தங்கி படிக்க பெரு உதவி செய்து வரும் கே.ஆர்.டி நிறுவன உரிமையாளரின் பெயரை வார்னர் சாலைக்கும் பெயர் மாற்றம் செய்து வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை தமிழக முதல்வர் அவர்கள் பிறப்பிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என

வக்கீல்.S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.