திருச்சி திருவெறும்பூர் தொகுதி, நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் கொரேனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீங்கள் எந்தவித தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி இட்டுக் கொள்ளும் போது அதே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார் .
தமிழக முதல்வர் அவர்களின் நோய் தடுப்பு முயற்சிக்கு உறுதுணையாக இருந்து சமூக இடைவெளியை கடைபிடித்து முகக் கவசத்தை அணிந்து நோயிலிருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் பாதுகாப்போம் என கூடி இருந்தவர்களிடம் கூறினார்.
கொரோனா தடுப்பூசி முகாமில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாராட்டும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்தார் அமைச்சார்.
ஒன்றிய பொதுநிதி ரூ.6 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், கே.எஸ்.எம். கருணாநிதி, மாரியப்பன், நவல்பட்டு சண்முகம், கங்காதரன், கயல்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.