Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்பிரமணியபுரத்தில்எம்.ஆர்.குறைந்த விலை ஆடையகம் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார்.

0

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சங்கீத் மஹாலில் “எம்ஆர் கார்மெண்ட்ஸ்” என்ற பெயரில் திருப்பூர் ஆடைகள் விற்பனையகம் திறக்கப்பட்டு உள்ளது.

கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சி பிரபல கம்பெனியின்தரமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள் கைலிகள், பேக், கூலிங் க்ளாஸ், மேட், கம்பெனி செருப்பு, வகைகள் உள்ளிட்டவை ரூபாய் 20 முதல் 200 வரை மட்டுமே.

இந்த கடையில் குறைந்த விலையில் திருப்பூர் ஆடைகள் மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மிகக் குறைந்த விலையில் தரம் உயர்ந்த ஆடைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்காக உள்ளது.

இக்கடையின் உரிமையாளர் ஆனந்தி கமலக்கண்ணன் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர்,

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக முக கவசங்கள் மற்றும்

தங்கள் கடையில் வாங்கும் பொருள்களின் விலைகளுக்கு ஏற்றவாறு பரிசுப்பொருட்கள் அறிவித்தது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த ஆடை உலகம் திறந்து இருப்பதால் சுப்பிரமணியபுரம் சுற்றுவட்டார பகுதி நடுத்தர வர்க்க பொதுமக்கள் பெரிதும் பயனுள்ளதாக கூறிச் சென்றனர் .

Leave A Reply

Your email address will not be published.