சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை .
திருச்சி சமயபுரம் டோல்கேட் மாருதி நகர் ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 46) கூலித் தொழிலாளி.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு, தூக்கு போட்டு தற்கொலைக்கு பலமுறை முயன்று உள்ளார் . பின்னர் உறவினர்கள் அவரை மருத்துவமனைகளில் சேர்த்து உயிரை காப்பாற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்து மாயமானார். பின்னர் வீடு திரும்பவில்லை. 
பின்னர் தாளக்குடியில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்து உள்ளார் `…. இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு இருங்கலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

