புதுக்கோட்டையில் நாளை (ஆகஸ்ட் 4) புதன்கிழமை கொரொனா விழிப்புணர்வு முகாம் நடைபெறும் : மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.உம்மல்கதிஜா தகவல்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும் ,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாஇராமு அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறையின் மூலம் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ துறையின் சார்பில் கொரொனா மருத்துவ முகாம் நாளை நடைபெறும் என புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.உம்மல் கதிஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவத் துறையின் சார்பில் கபசுரக் குடிநீர், அமுக்கரா சூரண மாத்திரை மற்றும் இலவச மருத்துவ முகாம் புதுக்கோட்டை நகர்மன்ற அலுவலக வளாக கட்டிடத்தில் வைத்து நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

முகாமினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாஇராமு தொடங்கி வைக்கிறார்.
பின்னர் புதுக்கோட்டை நகராடசி பகுதிகளில் கபசுரக்குடிநீர் வழங்கவும், கொரொனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவும் , துண்டு பிரசுரங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
முகாமில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
முகாமானது காலை 10 மணி முதல் நடைபெறும்.முகாமில் மூலிகைக் கண்காட்சியும் இடம் பெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.