திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது
திருச்சி உறையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் திருச்சி புத்தூர் தெற்கு திரௌபதி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் குட்கா பொருட்களை கடத்திச் சென்ற திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூர் வசந்த நகர் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது 70 ) உறையூர் நவாப் தோட்டம் காவேரி நகர் 1-வது கிராஸ் பகுதியை சேர்ந்த மணிக்குமார் (வயது 26) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
பின்னர் 14 கிலோ ஹான்ஸ், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் பத்தாயிரம் ஆகும். போலீசார் பின்னர் மணிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தியாகராஜனை கைது செய்து நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த சம்பவத்தில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

