Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது ..

0

'- Advertisement -

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது ..

Ad banner

நாளை மறுநாள் கல்லணை திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடகம் தமிழகத்துக்கு சிறிதளவு தண்ணீர் திறந்து விட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. அதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து விட்டார் முதல் கட்டமாக வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று காலை மாயனூர் கதவணைக்கு வந்தடைந்தது. நேற்று காலை 6 மணி அளவில் வினாடிக்கு 2 737 கன அடி தண்ணீர் வந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து 4, 081 கனஅடியாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து 2050 கன அடி வீதம் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் இன்று காலை முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது.

ஏற்கனவே முக்கொம்பு மேலணைக்கு 777 கன அடி நீர் வந்த நிலையில் தற்போது 1500 கன அடியாக  உயர்ந்துள்ளது.  நேரம் செல்ல செல்ல நீர் வரத்தின் அளவு மேலும் சற்று உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமேஸ்வரன் கூறினார்.

தற்போது வரும் 1500 கன அடி நீரும் காவிரியில் முழுமையாக திறந்து விடப்படுகிறது.  இந்த நீர் நாளை கல்லணைக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நாளை மறுநாள் (6-ந்தேதி)கல்லணையில் இருந்து தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களின் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே முக்கொம்பு மேலணையில் இருந்து பாசனத்துக்கு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  இதுவரை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.