திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்து அத்துமீரும் ஒப்பந்ததாரர் . தில்லை நகர் வசந்த விகார் காலனிவாசிகள் புகார்
திருச்சி தில்லை நகர், தேவர்காலனி, முதல்தெருவில் தெருவில் உள்ள வசந்தவிஹார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வடிகால் வாரி கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டு, மேற்படி பணியும் முடிவுபெற்று விட்டது.
இதில் எங்கள் அடுக்குமாடி வாசலில் இருந்து சுமார் 15 மீட்டர் அளவில் வடிகால் கட்ட ஆரம்பிக்காமல், மீதி இடத்தில் இருந்து கட்ட ஆரம்பித்தனர். கேட்டதற்கு தண்ணீரை தேங்க வைப்பதற்காக அந்த இடத்தை உபயோகப்படுத்தி விட்டு கடைசியாக கட்டி தருகிறேன் என்று ஒப்பந்ததாரர் கூறினார். இது மாநகராட்சி அலுவலர்களுக்கும் தெரியும். ஆனால் மேற்படி இடம் இன்று வரை எந்த இடமும் கட்டாமல் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லை உள்ளது. வியாதி பரவும் சூழ்நிலை உள்ளது.
அந்த இடத்தில் இரண்டு மின் கம்பங்கள் மண் அரிப்பு ஏற்பட்டு கீழே விழும் அபாயத்தில் உள்ளது. எனவே உடனடியாக நாங்கள் இந்த இடத்தை சரிசெய்து வடிகால் கட்டித் தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். அதுவரை ஒப்பந்த தொகையை வழங்காமல் வேலை முடிந்த உடன் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என அந்த அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

