Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிஓஎஸ் இயந்திரத்தை ஒப்படைக்க முயன்ற ரேஷன் கடை ஊழியர்களால் பரபரப்பு ..

0

'- Advertisement -

ரேசன் கடையில் கை ரேகை பதிவு செய்வதில் சர்வர் பிரச்சினை

Ad banner

திருச்சியில் பிஓஎஸ் இயந்திரத்தை ஒப்படைக்க முயன்ற ரேஷன் கடை ஊழியர்களால் பரபரப்பு ..

ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் பிஒஎஸ் இயந்திரத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக சரியாக இயங்கவில்லை என குற்றம் சாட்டி அந்த இயந்திரத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ப.ரமேஷ் தலைமை தாங்கினார்.

மாவட்ட இணைச் செயலாளர் செல்வமணி, நகர செயலாளர் எடத்தெரு பாபு மாவட்ட செயலாளர் பொன்னர் , நிர்வாகிகள்ஜாபருல்லா, தேவசேனா , விஜயராணி, பூங்குடி, சக்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பிறகு அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினிடம் பேச்சுவார்த்தை நடத்தி சர்வர் பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்று உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.