Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிரானைட் குவாரி அதிபரிடம் அரசு அதிகாரி போல் நடித்து ரூபாய் 2 லட்சம் மோசடி ..

0

'- Advertisement -

கிரானைட் குவாரி அதிபரிடம் அரசு அதிகாரி போல் நடித்து ரூபாய் 2 லட்சம் ஆன்லைன் மோசடி ..

Ad banner

போலீசார் விசாரணை

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72) இவர் கரூர் பகுதியில் ஒரு கிரானைட் குவாரியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஒரு அரசு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு உங்களது குவாரிக்கான குத்தகை காலம் காலாவதி ஆகிவிட்டது அதனை புதுப்பிக்க ரூபாய் இரண்டு லட்சம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார் இதனை நம்பிய தனபால் அந்த மர்ம ஆசாமி கொடுத்த வங்கி கணக்குக்கு ரூபாய் 2 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்து உள்ளார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட தனபால் திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.