Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது .

0

'- Advertisement -

திருச்சியில் குடிக்க பணம் கேட்டு கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது .

Ad banner

தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 49 ) இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே நடந்து சென்ற போது தென்னூர் அன்னை சத்யா நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி குருமூர்த்தி என்கிற காட்டு ராஜா பைபிள் (வயது 25) என்பவர் மது குடிக்க பணம் கேட்டார் ஆனால் விஜயகுமார் பணம் கொடுக்க மறுத்து விட்டார். உடனே குருமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 500 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து விஜயகுமார் தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி குருமூர்த்தியை கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.