
திருச்சியில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட இரண்டு பேர் கைது.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்த பொழுது ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் மில் காலனியை சேர்ந்த மதன் மித்திரன் (வயது 40) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மதன்மித்ரனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று ராம்ஜிநகர் மில் காலனி பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்பவரின் மனைவி மல்லிகா (வயது 65) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரை மதுவிலக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 1.790 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 90 ஆயிரம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

