Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைது ;அரிவாள் பறிமுதல

0

'- Advertisement -

திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் கைது ;அரிவாள் பறிமுதல்

Ad banner

திருச்சியில் வாலிபரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு மிரட்டிய ஆறு பேர் கொண்ட கும்பலை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீரங்கம் கீழ சித்திர வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33.) இவர் நேற்று பாலக்கரை உய்யகொண்டான் கால்வாய் அருகே சிறுநீர் கழிக்க சென்றபோது ,ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டது. இது குறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை பீமநகரை சேர்ந்த வீரமுத்து (வயது 28 ) என்ற சரித்திர பதிவேடு ரவுடி கிறிஸ்டோன் (வயது 22) சரித்திர பதிவேடு ரவுடி பிரிட்டோ (வயது 21) சாமிராஜ் (47) ஜேக்கப் ரோடு (42) எபிநேசர் சரண் (29 )ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.