திருச்சி மாநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் பிரதான 600mm விட்டமுள்ள உந்து குழாயின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வியோகம் செய்யப்பட்டு வருகிறது .
திருச்சி சென்னை தேசிய நெடுச்சாலை விரிவாக்க பணியானது சங்கிலியாண்டபுரத்தில் நடைபெறுகிறது .

எனவே உந்து நீர் குழாயினை மாற்றி அமைக்கும் பொருட்டு இப்பணியை மாநகராட்சியால் நாளை 22.07.2021 மேற்கூறப்பட்டுள்ள நீறேற்று நிலையம் தொடர்புடைய தேவதானம் , விறகுப்பேட்டை , மகாலட்சுமிநகர் கல்லுக்குழி , அரியமங்களம்உக்கடை , வடக்கு உக்கடை , ஜெகநாதபுரம் மற்றும் சங்கிலியாண்டபுரம் நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது .
23.07.2021 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும்.
இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார் .