தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் 1.85 கோடி நிவாரண நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக கடந்த 15 ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் கொரோனா (பொது) நிவாரண நிதிக்காக ரூபாய்
*1 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 661 ரூபாய்க்கான வங்கி வரைவோலை* வழங்கப்பட்டது.
இவ்நிகழ்வில் மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை மனு வழங்கி தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும் கொரோனா நிதி வழங்கிய போது இரண்டாவது குழுக்களாக சென்ற மாவட்ட செயலாளர்கள் தமிழக முதல்வர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகளுடன் இருந்து சிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்தனர் .