Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

இன்று பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

Ad banner

திருச்சி மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்பு .

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்

​டி.என்.இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திருச்சி பெருநகர் வட்ட கிளை சார்பில், தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

 

​ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மெட்ரோ சங்கத் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார். கோரிக்கையை விளக்கி மண்டலச் செயலாளர் காளிதாஸ்,

செயலாளர் சிவச்செல்வன்,

மணப்பாறை செயலாளர் அன்புச்செல்வன், கிழக்குக் கோட்டச் செயலாளர் மணி ஆகியோர் பேசினர்.

​இதில் நிர்வாகிகள் தனராஜ், பாண்டியன், துறையூர் சிவராஜ் உள்பட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு, கைது நடவடிக்கைக்கு எதிராகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.