தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் , திருச்சியில் நடந்த மாநில பொது குழுவில் தீர்மானம்.
தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் வடிவேலு மாநில பொருளாளர் கந்தசாமி அமைப்புச் செயலாளர் ராதாகிருஷ்ணன் துணைத் தலைவர் நீதிதேவன் இணைச்செயலாளர் கருப்பசாமி உள்பட மாநில முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது,இரண்டு மாதங்களில் ஏற்படும் காலி பணியிடங்களை கருத்தில் கொண்டு வருகிற ஆகஸ்ட் மாதம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்,தற்போதைய கால நடைமுறைகளுக்கு ஏற்றவாறு பொது சுகாதாரச் சட்டத்தை மறு ஆய்வு செய்து சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கைகளை இயக்குனர் முன்னெடுக்க வேண்டும்,தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

