Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நகைகளை கொடுக்காமல் திருச்சி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு .

0

'- Advertisement -

மலேசியாவில் இருந்து அனுப்பிய நகைகளை கொடுக்காமல் திருச்சி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு .

Ad banner

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் ( வயது 63). இவர் என்எஸ்பி ரோட்டில் ஜவுளி விற்பனை செய்து வருகிறார். இவரது அக்கா மகன் சாதிக் பாஷா இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவர் 150 கிராம் தங்க நகைகளை தனது மாமாவிடம் கொடுக்கும்படி அய்யனார் மற்றும் கவினேஷ் ஆகியோரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் கடந்த 4-ந் தேதி அன்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தின் மூலம் வந்து உள்ளனர்.பின்னர் அவர்கள் நகைகளை அவரது மாமாவிடம் கொடுக்காமல் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சீமான் மற்றும் சிங்கப்பாண்டி ஆகியோர்களிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதர்மைதீன் இது குறித்து விமான நிலைய காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.