திருச்சி காவேரி மருத்துவமனை அலட்சியமான சிகிச்சையால் மகன் பலி.5 கோடி இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு
என் மகன் இறக்க காரணமாயிருந்த திருச்சி கே.எம்.சி மருத்துவமனை மீது 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு – பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் பகுதியில் பானுமதி, ஸ்ரீதர் இவர்களின் ஒரே மகன் விஜயகாந்த் இவர் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 2019 ஜூலை மாதம் திருச்சி கே.எம்.சி (காவேரி) மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு நடைபெற்ற சிகிச்சையில் எங்களிடம் தெரிவிக்காமலேயே எனது மகனின் தொண்டையில் ஓட்டை போட்டு சிகிச்சை நடத்தியிருக்கிறார்கள்.
மருத்துவமனையில் 4 லட்சம் வரை நாங்கள் செலவு செய்தோம் மீதமுள்ள தொகையை முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் தருகிறோம் என்று கூறினோம்.
ஆனால் அதெல்லாம் இங்கு எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். நான்கு நாட்கள் சிகிச்சை நடத்திவிட்டு பணம் இல்லாத காரணத்தினால் ஐந்தாம் நாள் உங்கள் மகனை கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்.
ஆனால் (12.07.2019) அடுத்த நாள் மதியம் என்னுடைய மகன் இறந்து விட்டான். திருச்சி காவேரி மருத்துவமனைக்கு வரும் போது என் மகனை நடக்க வைத்து கொண்டு வந்து சேர்த்தேன்.
ஆனால் அலட்சியமாக இருந்து என் மகன் இறக்க காரணமாயிருந்த காவேரி மருத்துவமனை இயக்குனர் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனி இதுபோல் எந்த ஒரு ஏழை எளிய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் என்னுடைய மகன் இறப்புக்கு காரணமாயிருந்த காவேரி மருத்துவமனை ( கே.எம்.சி) 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.