1.

ஶ்ரீரங்கம் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில்
மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு
போலீசார் விசாரணை.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அதனை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சோதனைக்காக கொண்டு சென்றனர் .இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில்
மயங்கி விழுந்து
டீக்கடை ஊழியர் சாவு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகரை சேர்ந்தவர் ராஜூ (வயது 55) இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி அன்று ராஜு திடீரென சுயநினைவின்றி கீழே மயங்கி விழுந்த அவருக்கு வாயில் நுரை வந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த 108ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்தனர்.பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3.
திருச்சி எ.புதூரில்
தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டில் இருந்து விழுந்தவர் சாவு
திருச்சி புத்தூர் வடக்கு முத்துராஜா பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38) இவருக்கு காச நோய் பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் மதுபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

