Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : மதுவுக்கு அடிமையான ஆத்மா குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு .

0

'- Advertisement -

திருச்சி : மதுவுக்கு அடிமையான ஆத்மா குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு .

Ad banner

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (வயது 27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர் என்பது வீட்டில் வசித்து வந்தார். ஆத்மாவிற்கு குடிப்பழக்கம் மற்றும் புகை பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் குளியல் அறையில் ஆத்மா மயங்கி விழுந்து கிடந்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆத்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.