Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தோஷம் இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு.

0

'- Advertisement -

திருச்சியில் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் தோஷம் இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு.

Ad banner

குடுகுடுப்புக்காரன் வேடம் அணிந்து வந்த 3 பேர் கைது.

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை திருமலை நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி சுபா (வயது 42) சரவணன் ரெயில்வேயில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21 ந்தேதி காலை சுபா வீட்டிற்கு மூன்று மர்ம ஆசாமிகள் வந்து வாசலின் வெளியே நின்று கொண்டு குடுகுடுப்புக்காரன் போல் சத்தம் போட்டு பேசி கொண்டு இருந்தனர்.

அப்பொழுது குடுகுடுப்புக்காரன் வேடமிட்டு இருந்த ஒரு வாலிபர் உங்களுடைய கணவருக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது. அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்று கூறியுள்ளனர். இதனை கேட்ட சுபா வீட்டில் இருந்து ஓடி வந்து அவர்களிடம் மேலும விவரங்களை கேட்க வீட்டுக்குள் அழைத்தார்.வீட்டுக்குள் வந்த குடுகுடுப்பு காரன் பரிகார பூஜை செய்தால் இந்த பிரச்சனை சரியாகிவிடும். உங்களுடைய தாலியை கழட்டி கொடுங்கள். அதை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.அதற்கு சுபா தாலியை கழற்றி தர முடியாது. வேண்டுமானால் காது தோடை கழற்றி தருகிறேன் என்று கூறி தனது காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்கத் தோடை கழட்டி அந்த குடுகுடுப்புக் காரனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து குடுகுடுப்பு காரன் மற்றும் அவனுடன் வந்த இரண்டு பேர் சேர்ந்து பூஜை செய்வது போல் நடித்து அந்தத் தோடை எடுத்துக் கொண்டு அங்கிருந்து எடுத்து விட்டனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுபா சம்பவம் தொடர்பாக பொன்மலை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பகுதியில் குடுகுடுப்புக்காரன் வேடத்தில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் பகுதியை சேர்ந்த சிம்பு (வயது 22) மற்றும் வல்லரசு (வயது 23) மற்றும் இன்னொரு வாலிபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கிராம் தங்கத்தோடை பறிமுதல் செய்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.