நடிகர் விஜய்க்காக 14 வது வார்டில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் .

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 14வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா சிலை மேல சிந்தாமணி பகுதிகளில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் வீடு வீடாக சென்று விஜய் அறித்து உள்ள வாக்குறுதிகளை குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ. 2500 ,அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் போன்ற திட்டங்களை பெண்களிடம் எடுத்துக் கூறி டிசைன்ஸ் இல்லத்தில் வாக்களிக்குமாறு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் ,நிர்வாகிகள் போட்டோ விமல் ,கோயில் சீனி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

