Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.திருச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தக பிரிவினர் மனு

0

'- Advertisement -

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். பறக்கும் படை சோதனையால் வியாபாரிகள் கடும் பாதிப்பு .

திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தகர் அணி வலியுறுத்தல்.

திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் காரணம் வியாபாரிகளிடம் கையிருப்பு 50,000 மிகைக்காமல் இருக்க வேண்டும் என்கின்ற விதியின் படி அன்றாடம் வணிகத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடைவீதிகளுக்கு செல்லுகின்ற பொழுது இந்தத் தொகை போதுமானதாக இல்லை எனவே 50 ஆயிரம் என்கின்ற தேர்தல் விதிமுறையை மாற்றி கூடுதலாக கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அதிகாரிகள் ஆவணம் செய்ய வேண்டும். ஏற்கனவே உணவகங்கள் மற்றும் வணிகம் சார்ந்த பல்வேறு பயன்பாடுகளுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்கின்ற இக்காலச் சூழலில் வியாபாரம் நிறுத்தமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்ற வணிகர்களில் நிலைகளை தயவு கூர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம் ,

வணிகர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற இச்சூழலில் தேர்தல் முடிகின்ற வரை இன்னும் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிய இருக்கின்ற காரணத்தினால் எதிர் வர இருக்கின்ற மாதம் வணிகர்களிடமிருந்து பெறப்படும் ஜிஎஸ்டி வரியில் சலுகை அல்லது தள்ளுபடி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் முபாரக் அலி திருச்சி மாவட்ட தலைவர் பக்ருதீன் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் மாவட்ட செயலாளர் தென்னூர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.