திருச்சி தில்லைநகர் 5வது குறுக்குத் தெருவில் வேலா ஆட்டோமொபைல் நிறுவனம் சார்பில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, குரு ஓட்டல் உரிமையாளர்கள் ரெங்கநாதன், மணி, திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ஷோரூம் குறித்து வேலா ஆட்டோமொபைல் நிறுவன இயக்குனர்கள் மணிவண்ணன், சிபி ஆகியோர் கூறுகையில், ஏத்தர் நிறுவனம் சார்பில் 2 மாடல் மின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
450 எக்ஸ், 450 பிளஸ் என 2 மாடல் ஸ்கூட்டர்கள் இந்த ஷோரூனில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் 450 எக்ஸ் ரூ.1.54 லட்சமாகும். 450 பிளஸ் ரூ. 1.34 லட்சமாகும். அரசு வழங்கும் மானியமான ரூ.43 ஆயிரம் போக இந்த தொகை வாகனங்களின் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏத்தர் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.
அதிகபட்சமாக 85 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய வாகனங்கள் ஆகும்.
இந்த வாகனங்களுக்கு 2 வகையான சார்ஜர் வசதி உள்ளது. ஸ்லோ சார்ஜர் 3 மணி நேரம் சார்ஜ் ஆகும்.
ஃபாஸ்ட் சார்ஜர் 30 நிமிடங்களில் சார்ஜ் ஆகும். திருச்சியில் 10 இடங்களில் சார்ஜ் பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனம் புக்கிங் செய்தவுடன் உடனடி டெலிவரி செய்யப்படும் எனவும் கூறினார்கள்.