Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குடும்ப அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி வழங்க தமிழக முதல்வர் உத்தரவு

0

'- Advertisement -

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களான குடும்ப அட்டை வழங்குதல், உணவு பொருட்கள் விநியோகம், சிறப்பு பொது விநியோக திட்டம், ரேசன் கடைகளை கணிணி மயமாக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

குடும்ப அட்டைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதை வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெருந்தொற்று காலத்தில், சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத் திறனாளிகள், உள்ளிட்டடோருக்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடன் வழங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ரேசன் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வந்து பொது விநியோக திட்டத்தை முழுமையாக கணினிமயமாக்க வேண்டும், எடைக்குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.