திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை.நீண்ட வரிசையில் கேஸ் ஆட்டோக்கள் காத்திருப்பு.
அமெரிக்கா இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக -திருச்சியில் கேஸ் பங்குகள் மூடப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை.

கேஸ் தட்டுப்பாடு காரணமாக திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒரு சில கேஸ் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோக்கள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது.பெட்ரோல் போட்டு ஆட்டோக்கள் இயக்கினால் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை.
இதனால் நாங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோ டிரைவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

