Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு இடங்களில் ஹான்ஸ் விற்ற 5 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 5 பேர் கைது.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் ஹான்ஸ், கூலிப் போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், பல்வேறு இடங்களில் ரகசியமாக இவை விற்பனை செய்யப்படுகின்றன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருவெறும்பூர், லால்குடி, துறையூர், தொட்டியம் மற்றும் வளநாடு ஆகிய பகுதிகளில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்றதாக ஷியாம் சுந்தர் (வயது30), அஜித் குமார் (25), அபிஷேக் (24), ரெங்கராஜ் (55) மற்றும் நல்லுசாமி (37) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.