திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ முகாம் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
16 ஆம் மாத BP /சக்கரை (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு) பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று 9/3/2025 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

