Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில்

ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில்

0

6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் குஜராத் மாநிலம் கோலியாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நிஸ்களங்கேஸ்வரர் என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டப்பட்டுள்ளது.
இது பாதி நேரம் கடலினுள் முங்கியே காணப்படுகிறது. இந்த கோயில் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே அமைந்துள்ளது. இத்தனை அதிசயம் நிறைந்த கோயிலை கட்டியவர்கள் பாண்டவர்கள் என்று நம்பப்படுகிறது. மகாபாரதப் போரில், பாண்டவர்கள் தங்கள் சகோதரர்களான கௌரவர்களையே கொன்றதான் ஏற்பட்ட பாவத்தைப் போக்க இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த கடலுக்குள் ஐந்து சிவலிங்களை அமைத்து, அதைச் சுற்றி கோயிலையும் கட்டியுள்ளனர் பாண்டவர்கள்.
கடலுக்குள்ளே இருந்தால் பக்தர்கள் எப்படி செல்வார்கள் என்பதுதானே உங்கள் சந்தேகம்? இரவு பத்துமணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும் இந்த கோயில் கடலுக்கு உள்ளே மறைந்திருக்கும். மதியம் 1 மணிக்கு பிறகு கடல் மெல்ல மெல்ல உள்வாங்கி, கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இந்த வழியாக நடந்து செல்லும் மக்கள், கடலுக்கு நடுவே இருக்கும் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். அரிய நிகழ்வு என்றவுடன் ஏதோ வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று நடக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். அன்றாடம் இந்த நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.