Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:பகுதி செயலாளரும்,கவுன்சிலாருமான காஜாமலை விஜய் ஏற்பாட்டில் நடை​பெற்ற ஜல்​லிக்​கட்​டில் காளை முட்டி பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு.

0

'- Advertisement -

திமுக சார்​பில் திருச்​சி​யில் நேற்று பகுதி செயலாளரும்,கவுன்சிலாருமான காஜாமலை விஜய் ஏற்பாட்டில் நடை​பெற்ற ஜல்​லிக்​கட்​டில் காளை முட்டி பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக முதல்​வர் ஸ்டா​லின் பிறந்த நாளை முன்​னிட்டு திருச்சி காஜாமலை பகு​தி​யில் உள்ள ஜமால் முகமது கல்​வி​யியல் கல்​லூரி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ஜல்​லிக்​கட்​டுப் போட்​டியை அமைச்​சர் கே.என்​.நேரு தொடங்கி வைத்​தார்.

ஆட்​சி​யர் வே.சர​வணன், காவல் ஆணை​யர் என்​.​காமினி, மேயர் மு.அன்​பழகன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இந்​தப் போட்​டி​யில் 706 காளை​கள் பங்​கேற்​றன. 306 மாடு​பிடி வீரர்​கள் களம் இறங்​கினர்.

அதிக காளை​களை அடக்​கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கார், புல்லட், பைக் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கரூர் மாவட்​டம் ராச்​சாண்​டார் திரு​மலை அழகாபுரத்​தைச் சேர்ந்த இளை​ய​ராஜா மகன் பிரதீப் (வயது 16) என்ற பிளஸ் 2 மாணவர், தனது நண்​பர்​களு​டன் ஜல்​லிக்​கட்​டுப் போட்டியை பார்க்க வந்​தார்.

 

அப்​போது கூட்டத்தில் புகுந்த காளை முட்​டிய​தில் பலத்த காயமடைந்த அவர், மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் பரிதாபமாக உயி​ரிழந்​தார்.

இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரனை வருகின்றனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை பகுதி செயலாளரும்,திமுக கவுன்சிலருமான காஜாமலை விஜய் ஏற்பாடு செய்திருந்தார்.

இதே​போல, காளை​கள் முட்​டிய​தில் 15 வீரர்​கள் உட்பட 59 பேர் காயமடைந்​தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.