திமுக ஆட்சியில் விலையற்றம் குறித்து இல்லம்தோறும் சென்று அதிமுக பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் எடுத்துக் கூறிய மாவட்ட செயலாளர் சீனிவாசன்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர்,
முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் 55வது வார்டுக்கு உட்பட்ட பொன்நகர் பகுதியில் கருமண்டபம் பகுதி செயலாளர் பி.சுரேந்தர் முன்னிலையில் வட்ட செயலாளர் கணேசன் ஏற்பாட்டில் விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு விடியா திமுக ஆட்சிக்கு எதிராக“விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி” என்ற தலைப்பில், அஇஅதிமுக கனெக்ட் செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சிக் காலத்தையும் தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு, வட்ட செயலாளர்கள் கதிர்வேல், பெருமாள், வெங்கடேஷ், அமீர்பாஷா, மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் வக்கீல் தினேஷ் டிபன் கடைகார்த்தி,
சுப்பன் என்கிற சுப்ரமணி உட்பட ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

