Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.

0

'- Advertisement -

பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC )

கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பொன்மலை பொறுப்பாளரும் திருச்சி கோட்ட செயலாளருமான வீரசேகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

பொன்மலை தொழிற்சாலையில் புதிய வேகன்கள் உற்பத்தி செய்யும் இடம் நமது வேகன் பகுதி மட்டுமே.

உதிரி பாகங்கள் நமது இடத்திலேயே தயாரிக்கப்பட்டு வேகன்கள் உருவாக்கப்படும்.

தற்பொழுது உதிரி பாகங்கள் அனைத்தும் தனியாரிடம் வாங்குவதால் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் நமது பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிளையின் உதவி தலைவர் .ரூபன் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.