Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி. திருச்சி மாநகர அதிமுக சார்பில் முதல் கட்டமாக தீவிர பிரச்சாரப் பணி துவக்கம்.மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு.

0

'- Advertisement -

விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் முதல் கட்டமாக தீவிர பிரச்சாரப் பணி துவக்கம்.

 

Ad banner

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தலின்படி

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்

அதிமுக கழக அமைப்புச் செயலாளர் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல் ஆகியோர் தலைமையில்

விடியா திமுக ஆட்சியில்,

கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு

TVK ad

விடியா திமுக ஆட்சிக்கு எதிராக

“விடியா ஆட்சி உங்கள்

வீட்டு Bill-லே சாட்சி”

என்ற தலைப்பில், AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து,

எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தையும்;

தற்போது நடைபெற்று வரும் விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விடியா திமுக ஆட்சி கொடுத்திருக்கும் Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.