திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த அர்ஜுன் சம்பத்தின் காவி துண்டைப் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு.
திருச்சி நீதிமன்றத்தில் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த போது இந்து மக்கள் கட்சி நிறுவனர்
அர்ஜுன் சம்பத்தின் காவி துண்டைப் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு.
திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு .
கடந்த 2006 ஆம் ஆண்டு, திருச்சி, திருவரங்கம் ராஜகோபுரம் முன்பு உள்ள பெரியார் சிலை உடைத்ததாக அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இதன் விசாரணைக்காக நேற்று வியாழக்கிழமை அர்ஜுன் சம்பந்
சி.ஜெ.எம். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, வெளியே வரும் போது அவரது ஆதரவாளர்கள் அவரை செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் வீடியோ எடுக்கக் கூடாது, பேட்டி எடுக்கக் கூடாது என அங்கிருந்து வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும். தன்னிடம் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டுமென,
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீர் அலி என்பவரிடம் அர்ஜுன்சம்பத் வாய்மொழியாக புகார் அளித்தார்.
இந்தத் தள்ளுமுள்ளு நிகழ்வால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜுன் சம்பத் கூறும் போது, வழக்கறிஞர்கள்
சிலர் எங்களை சூழ்ந்து கொண்டு ஈவேரா வாழ்க என முழக்கமிட்டனர்.
ரவுடிகள் போல் நடந்து கொண்டனர்.அந்த வழக்கறிஞர் தனது செயல்பாடுகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டும்.
நான் தோளில் அணிந்துள்ள காவி துண்டை பறிக்க முயல்வது, என் மீது தாக்குதல் நடத்த முயலும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
இதனை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

