திருச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து ஜி பே மூலம் ரூ.10ஆயிரம் அனுப்பி செய்தி வெளியிடக் கூறியது யார்? மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் பரபரப்பு தகவல்.
திருச்சி பருப்பு கார தெருவில் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா கூட்டத்தின் போது மேடை சரிந்து விழுந்தது.அதையும் மீறி அந்த பொது கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தார் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்.
இந்த நிலையில் மேடை சரிந்து விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.
இந்த வீடியோவில் மேடை சரிந்து விழுந்த காட்சி மட்டுமே வெளியிடப்பட்டது ஆனால் அதன் பின்னே பொதுக்கூட்டம் சரியான முறையில் முறையாக நடந்து முடிந்ததை யாரும் செய்தியாக வெளியிடப்படவில்லை.
மேலும் சமூக வலைதளங்களில் இந்த மேடையை விழும் வகையில் அமைத்து அதை வீடியோவாக எடுத்து தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் மேடை அமைத்த நபரை விலைக்கு வாங்கி ஒரு சிலருக்கு ரூபாய் பத்தாயிரம் G.Pay யில் அனுப்பி செய்தி வெளியிட சொன்னதாக கூறப்பட்டு வந்தது.
இது குறித்து திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற துணை மேயருமான ஜெ.சீனிவானிடம் இதுகுறித்து கேட்டபோது
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்ற போது மேடை சரிந்து விழுந்தது உண்மைதான் .இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.மேலும் சரிந்த மேடையிலேயே பொதுக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திருச்சியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு மேடை அமைக்கும் நபர் பழனி அன்று திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற கள்ளர் மாநாட்டுக்கு சென்று விட்டதால் அவர் தனது ஆட்களை அனுப்பி மேடை அமைக்க செய்து இருந்தார்.
அனுபவம் இல்லாத நபரால் அமைக்கப்பட்ட மேடை சரிந்து விழுந்தது. ஆனால் இதனை செய்தியாக்கியது யார் என்பது தெரியவில்லை.ஜி பேயில் 10,000 பணம் அனுப்பி அதிமுக நிர்வாகி ஒருவர் செய்தியை வெளியிட சொன்னதாக வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது.மேடை சரிந்து விடும் என்பதை அறிந்து முன்னதாகவே ஒரு நபரை அனுப்பி வீடியோ எடுக்கச் சொல்லி அதனை வெளியிட சொல்லி இருப்பதாக கூறுவதும் தவறு.அதிமுகவின் உண்மையான நிர்வாகிகள் யாரும் அதிமுக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த மாட்டார்கள்.மேடை சரிந்து விழும் என்பது அறிந்தே அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது கூறுவதும் தவறானது.திருச்சி மாநகர அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாரோ கிளப்பிவிட்ட புரளி இது.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கிழக்கு தொகுதி மட்டுமல்ல தமிழகமெங்கும் அதிமுக வெற்றிக்காக நான் மற்றும் அதிமுகவினர் அனைவரும் உழைத்து வரும் இந்த நேரத்தில் இது போன்ற தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் எனக்கு கேட்டுக்கொள்கிறேன் என்று திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியுள்ளார்.
(மேடை சரிந்து விழுந்ததை வீடியோ எடுத்த நபர் மற்றும் சரிந்த மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற வீடியோவுடன் . )

