திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வார்டு பகுதியில் உள்ள காந்திநகரில் ஒரு மின்கம்பம் (எண்:W-31/ 8-70) மிகவும் மோசமான நிலையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மின்கம்பம் ஒட்டி அமைந்துள்ளது தனியார் பள்ளி கட்டிடமும், பொது மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் இந்த மின் கம்பம் உள்ளது. மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இப்பகுதி என்பதால் மின்கம்பத்தை உடனடியாக மாற்றியமைத்து தருமாறு கேட்ட பிறகு புதிய மின்கம்பம் நட்டு ஒரு மாதம் மேல் ஆகியும், மின்கம்பிய மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார்கள் மின்சார வாரிய அதிகாரிகள்.

பாழ் அடைந்த மின்கம்பத்தால் உயிர்ப்பலி ஏற்படும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..

