Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாதிய அரசியலில் இறப்பு சான்றிதழ் விவகராம்.மௌனத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் மதுசூதனன் ரெட்டி.

0

'- Advertisement -

சாதிய அரசியலில் இறப்பு சான்றிதழ் விவகராம்.

பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் பிறப்பு அல்லது இறப்பை சட்டபூர்வமாக பதிவு செய்யும் முக்கிய ஆவணம். இந்த ஆவணங்களை அரசு மருத்துவமனைகளிலோ, ஆரம்ப சுகாதரா நிலையங்களிலோ, அல்லது குழந்தை எங்கு பிறக்கிறதோ அந்த பகுதி மருத்துவமனைகளிலோ வாங்கி சார்பதிவாளர் அலுவலகங்களிலோ, அல்லது மாநகராட்சி, நகராட்சி சுகாதரா அலுவலரிடமோ அல்லது அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்திலோ, அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

 

கடந்த 2000 ம் ஆண்டு வரை 1969 ம் ஆண்டு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழ் தான் பிறப்பு இறப்பு பதியப்பட்டது. அதன்பிறகு தான் பழைய சட்டத்தை ரத்து செய்து 1.1.2000 ம் ஆண்டு முதல் புதிய பதிவு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பிறப்பு இறப்பு பதியப்பட்டு வந்தது. பின்னர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் திருத்தத்தோடு புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

 

அதன்படி சான்றிதழ்கள் பெறுவதில் சில புதிய விதிகள் மற்றும் கட்டண மாற்றங்களை கொண்டு வந்து 2025 ம் ஆண்டு ஜீலை மாதம் 31 ம் தேதி அந்த சட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தியது. 1.8.25 முதல் தமிழக அரசு புதிய திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் அதற்குண்டான உத்தரவை உயர் அதிகாரிகள் அமுல்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

இதன் பின்னர் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க 1.1.2026 முதல் திருத்தப்பட்ட பிறப்பு இறப்பு படிவங்களை தான் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கொடுக்கவேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டது. ஆனாலும் இப்போது வரை பழைய படிவங்களையே கொடுத்து வருகிறார்கள்.

 

இது தொடர்பாக நாம் மேலும் விசாரித்ததில் நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் இருந்து இதுவரை எந்தவொரு சுற்றறிகையும் முறையாக எந்தவொரு நகராட்சிக்கும் மாநகராட்சிக்கும் அனுப்பபடவில்லை என்றே சொல்கிறார்கள்.

 

தற்போது நகராட்சி நிர்வாக ஆணையராக பதவி வகிக்கும் மதுசூதனன் ரெட்டி பிறப்பு இறப்பு பதிவு தொடர்பான மிக முக்கியமான கோப்புக்களை கையாளும் விசயத்தில் மெளனம் காத்து வருகிறாராம்.

 

இவருடைய மெளனம் நகராட்சி, மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்களுக்குகிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய பிறப்பு இறப்பு படிவங்களை கேட்டு வரும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல இயலாமல் நகராட்சி, மாநகராட்சியில் பணியாற்றி வரும் பிறப்பு இறப்பு பதிவு அலுவலர்கள் திணறி வருகின்றனர்.

இதனால் தமிழகம் முழவதுமே 1.1.2000 ம் ஆண்டு பிறப்பு இறப்பு சட்ட பார்ம்களையே கொடுத்து வருகிறார்கள். காரணம் புதிய பார்ம்கள் அவர்களுக்கு வந்தால்தானே கொடுப்பார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி மாநகராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லுரி மருத்துவமனைகள், மற்றும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பிறப்பு இறப்பு படிவங்களை பெற்றுக்கொள்ள சொல்லியிருக்கிறார்கள்.

 

இது சம்பந்தமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை (ம) முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் அரசு துணைச்செயலாளர் அவர்களும் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேற்கண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லுரி மருத்துவமனைகள், மற்றும் ஏனைய பிற குழந்தைகள் பிறக்கும் அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் புதிய பிறப்பு இறப்பு தொடர்பான பதிவு படிவங்கள் கேட்டு உள்ளாட்சி அமைப்புகளை அணுகி வரும் நிலையில் இதுவரை நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் தங்களது தலைமையிடத்திலிருந்து எந்தவொரு உத்தரவும் வராத காரணத்தினால் படிவங்களை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு பின்னணியில் சாதிய அரசியல் இருப்பதாக சொல்லபடுகிறது.

எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு உடன் தலையிட்டு நிலைமையை சீர் செய்யவில்லை என்றால் சில சமூக நல அமைப்புகள் விஸ்வரூபம் எடுக்க போவதாக கடைசி கட்ட தகவல்கள் கூறுகின்றது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.