திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது.கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் .

குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மது,கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஆகும் எனவே இதனை கட்டுப்படுத்துவதற்காக திருச்சி மாநகர பகுதிகளில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.திருச்சி அனைத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது ராம்ஜிநகர் மில் காலனி பெரியார் தெரு அருகே கஞ்சா விற்ற மில் காலனி பெரியார் தெருவை சேர்ந்த சுரேகா (வயது 28) என்ற இளம் பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர் எடமலைப்பட்டி புதூர் போலீசார் .

