எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் ரூ.48 லட்சம் கொள்ளை: சென்னை போலீஸ் கமிஷனர் தகவல்.
எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் ஈடுபட்டது வெளிமாநில கும்பல் எனவும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறி உள்ளார்.

*இது தொடர்பாக எஸ்.பி.ஐ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:*
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், மற்ற மாநிலங்களிலும், இதேபோன்று ஏ.டி.எம்., கொள்ளை நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வேறு மாநிலத்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.