விஜய்யின் தீவிர ரசிகர், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரின் அன்புக்குரியவர் யார் என்றால் திருச்சி மட்டுமல்ல திருச்சி சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆர்.கே. ராஜா தான் என கூறுவார்கள்.
திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் ஆர்.கே. ராஜா.
கால சூழ்நிலையாலும் சிலர் சூழ்ச்சியாலும் தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லாவிட்டாலும் தான் ஒரு உண்மையான விஜய் ரசிகன் என்பதால் தொடர்ந்து விஜய் நற்பணி மன்றம் சார்பில் பொது மக்களுக்கு தொண்டாற்றி வருகிறார்.
இன்று நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புத்தூர் அமைதி நிலையம் முதியோர் இல்லத்தில் உள்ள அனைத்து முதியோர்களுக்கும் திருச்சி ஆர்.கே ராஜா சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதன்பின்பு திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தூர் நட்ராஜ் ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் டி.வி.எஸ். டோல்கேட் ஜீவா, ஞானவேல்,விஜய்பிரகாஷ், சரண்ராஜ், ஆட்டோ லோகு, லால்குடி லோகு, மிளகுபாறை சுப்பிரமணி, மண்ணச்சநல்லூர் சுரேஷ், ஆனந்த், மலைகோட்டை நசீர் உள்பட பலர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்