பெரியாரின் நினைவு 52 ஆம் ஆண்டு நினைவ நாள் :அமைச்சர் மகேஷ் பொய்யமொழி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
பெரியாரின் நினைவு 52 ஆம் ஆண்டு நினைவ நாள் அனுசரிப்பு .
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், பெரியாரின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தஞ்சை ரோட்டில் அமைந்துள்ள திருச்சி காட்டூரில் பகுத்தறிவு பகலவன் பெரியரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா , தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாநில அணி நிர்வாகி செந்தில்,
பொதுக்குழு உறுப்பினர்,கவுன்சிலர் KKK கார்த்தி, பகுதி செயலாளர் நீலமேகம் மற்றும் மாவட்ட மாநகர பகுதி, ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

