தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன கூட்டம்.
திருச்சி:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன கூட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சி மண்டலத்தில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களா ளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களின் உரிமையை பறிக்க நினைக்கும் நிர்வாகத்தை கண்டித்து திருச்சி நீதிமன்றம் வளாகத்தில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள
திருச்சி தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அருகே கண்டனக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள்
தனபாலன்,பாஸ்கர் சதீஷ்குமார், ரவி,ஜேசுதாஸ் ஒரத்தநாடு ராஜா பெரம்பலூர் ராமகிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பணி ஓய்வு பெறும் போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள் வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.அதவத்தூர் கிடங்கில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும்என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுச் செயலாளர் சிறப்புரை ஆற்றினார்
முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருச்சி மாவட்ட செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

