தியாகி அருணாச்சலத்தின் 116 -வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது :
திருஉருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பிலும் மாலை அணிவிப்பு.
தியாகி டி.எஸ்.அருணாச்சலம் 116 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக,
கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சருமான கே. என்.நேரு,திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி.மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர்.முத்து செல்வம்
முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ்,மாவட்ட பொருளாளர் முரளி,மகளிர் அணி அஞ்சு, தியாகியின் பேரன்கள் திலகர், அருண் தேவ்,மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம்,முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தியாகி அருணாச்சலம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் தியாகி அருணாச்சலம் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் தலைவர் திருச்சி வேலுச்சாமி,செயலாளர் முருகேசன்,பொது தலைவர் திருக்குறள் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தியாகியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்
முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், அறக்கட்டளை துணைத்தலைவர் கே.டி.தனபால், தியாகியின் பேரன் திலகர், தியாகியின் பேரனும், தொழிலதிபருமான அருண் தேவ் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல்,திருச்சி மாவட்ட காமராஜர் பேரவை தலைவரும்,காங்கிரஸ் மாநில பேச்சாளருமான திருவரங்கம் சிவாஜி சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் கள்ளத்தெரு குமார், வெல்லமண்டி பாலு, வைரவேல், மார்க்கெட் சம்சுதீன், சண்முகம், பாலாஜி, மாரியப்பன், திருச்சி மகாராஜா, விஜயலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

