Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள் திருடிய 3 வாலிபர்கள் கைது.

0

'- Advertisement -

.திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள் திருடிய

3 வாலிபர்கள் கைது.

 

திருச்சி சண்முகா நகர் 5 -வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 71 ) இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பொருட்களை போட்டு வைத்திருந்தார். அதில் உள்ள பொருட்களை சிலர் திருடி சென்று விட்டனர் . இதுகுறித்து வேல்முருகன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பொருட்களை திருடியதாக காளிமுத்து, ஹரி விஸ்வா, முகமது ரஷீத் ஆகிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கட்டிட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போன்று திருச்சி உறையூர் பாண்டமங்கலம் ராஜலட்சுமி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது காரை திருடிவிட்டதாக சரவணக்குமார் என்பவரது மனைவி அருணா அளித்த புகாரின் அடிப்படையில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் திருடியவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.