தனது தொகுதி பொதுமக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு பொதுமக்கள் பாராட்டு .இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு .
தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும்
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை
தலைமை செயலகத்தில் சந்தித்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தனது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு துவாக்குடி பகுதிகளில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி மற்றும் நவல்பட்டு கிராமப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள். அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை பராமரிக்கவும், சிகிச்சையளிக்கவும் மருத்துவமனை வெகு தொலைவில் இருக்கும் காரணத்தினால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அப்பகுதியை சுற்றியுள்ள கிராம விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் துவாக்குடியிலும், நவல்பட்டு கிராமத்திலும் தலா ஒரு கால்நடை மருத்துவமனை அமைத்து தர ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


தொடர்ந்து தனது திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் பொது மக்களுக்காக பல்வேறு துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் . கடைசியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் பொதுமக்கள் நலனுக்காக கோரிக்கை வைத்து காட்டூரில் கூட்டுறவு வங்கிக் கிளையை தொடங்கி வைத்தார் அமைச்சர். மகேஷ் பொய்யாமொழி . தற்போது கால்நடை மருத்துவமனை கேட்டு அத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது திருவெறும்பூர் தொகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

