தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவருடன் தவெக தலைவர் விஜய் தந்தை ஏஸ்ஏசி மற்றும் ஆர்.கே.ராஜா ஆகியோர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ராகுலுக்கு நெருக்கமானவரான பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சந்தித்து பேசிய நிலையில் தற்போது இவர்களது சந்திப்பு நடந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் திருச்சி வேலுசாமி. திமுக கூட்டணியில் இடம் பெற்று காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்தும், எத்தனை சீட் என்பது குறித்தும் ஐவர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவானது தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சை தொடக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட காங்கிரஸின் கோரிக்கைகளை திமுக ஏற்காது. ஆனால் விஜய் தனது முதல் விக்கிரவாண்டி மாநாட்டிலேயே ஆட்சியில் பங்கு என்பதை ஒப்புக் கொண்டார். இதனால் பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் பிரமுகர் செந்தில்பாண்டியனின் அண்ணன் மகள் நிச்சயதார்த்த விழா, இரு தினங்களுக்கு முன்பு திருவாரூரில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான திருச்சி வேலுசாமி, பொன் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது சந்திரசேகருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சு நடத்தினர். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் உண்மையான விஜய் ரசிகர் ஆர். கே. ராஜா ஆகியோர்.சென்ற காரில் திருச்சி வேலுசாமியும் சென்றாராம். அப்போது வேலுச்சாமி சந்திரசேகர் இருவரும் காங்கிரஸ்- தவெக கூட்டணி குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தனர். அப்போதும் கூட இருவரும் கூட்டணி குறித்து பேசியதாக கூறப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் திருச்சி வேலுசாமி சந்திப்பு கூட்டணி குறித்த நிகழ்ச்சியதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எஸ்.ஏ .சந்திரசேகர் எனது நண்பர் என்ற முறையில் சந்தித்ததாக தெரிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காங்கிரஸில் உள்ள திமுக ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, “ஆட்சியில் பங்கு, 35 தொகுதிகளை” கேட்டனர். அப்போது, “இது குறித்து ராகுலிடம் பேசுவதாக” ஸ்டாலின் சொல்லிவிட்டார். இந்த நிலையில்தான் கடந்த 5ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யை சென்னையில் அவரது இல்லத்தில் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியுள்ளார். அப்போது விஜய்யிடம் 75 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து அவற்றை காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு பிரவீன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தியை விஜய்யுடன் பேசியது தங்களுக்கு தெரியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்த நிலையில் திருச்சி வேலுசாமி, விஜய்யின் தந்தையை சந்தித்து பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சம்பவத்துக்கு பின் தலைமறைவானதால் புஸ்ஸி ஆனந்த் தற்போது புஸ்வானமாகியுள்ளார் . அவரது இடத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தந்தையை கொண்டு வர உள்ளார் என பேச்சு அடிபட்ட நிலையில் தற்போது கூட்டணி குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் எஸ்ஏசி ஈடுபட்டு உள்ளது அதனை உறுதிப்படுத்தி உள்ளது . மேலும் எஸ்ஏசி ஆதரவாளர்களை ரசீது மன்ற பொறுப்பில் இருந்து நீக்கினார் , இதில் திருச்சி ஆர்கே ராஜா கட்சிப் பொறுப்பு இல்லாமல் இருந்தாலும் விஜய் ரசிகர் மன்றம் முலம்.தொடர்ந்து மக்கள் பணி ஆற்றி வந்தார் . தற்போது இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஆர்.கே ராஜாவும் ஈடுபட்டு இருப்பது உண்மையான விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது .

