Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

17 வயது சிறுமியை திருமணம் செய்து 4 மாதம் குடும்பம் நடத்திய பின் 45 வயது விவசாயி. போக்சோ சட்டத்தில் கைது .

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது மூன்று மகள்களுடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

 

அங்கேயே தங்கி அவர்கள் தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அந்த தம்பதியின் மூத்த மகளான 17 வயது சிறுமி திடீரென்று வீட்டிலிருந்து மாயமானார். இதனால் பதறிப் போன பெற்றோர் தங்கள் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை பல இடங்களில் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செம்பிரான்குளத்தை சேர்ந்த விவசாயியான தோப்படியான் (வயது 45) என்பவர் மாயமான 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரிய வந்தது. பிறகு சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் விவசாயியிடம் இருந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.